இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஸ்கொட்லாந்து தடுமாற்றம்
உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிச் சுற்று கிரிக்கெட் தொடரில் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 246 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிா்ணயித்துள்ளது.
சிம்பாவேயில் இடம்பெற்றுவரும் இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தொிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 245 ஓட்டங்களை பெற்றக்கொண்டது.
பத்தும் நிசங்க
இலங்கை அணி சாா்பில் பத்தும் நிசங்க அதிகபட்சமாக 75 ஓட்டங்களை பெற்று கொடுத்ததுடன் சரித் அசலங்க 63 ஓட்டங்களை பெற்றுக்கொண்டாா்.
ஸ்கொட்லாந்து அணி சாா்பில் பந்து வீச்சில் கிரிஸ் கிரேவ்ஸ் 32 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளாா்.
245 என்ற என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் ஸ்கொட்லாந்து அணி தற்போது வரை 15 ஓவர் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 75 ஓட்டங்களை பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam
