உலகக் கிண்ண ஒப்பந்த விவகாரம்: ட்ரம்ப் உதவியை கோரியதாக எழுந்த முறைப்பாட்டுக்கு ஃபிஃபா மறுப்பு!
ஃபிஃபா (FIFA) அமைப்பின் உலகக் கிண்ண வணிக உரிமைகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் திட்டம் கைவிடப்பட்டதை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவை அதன் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ கோரியதாக வெளியான செய்திகளை ஃபிஃபா நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது.
உலகக் கிண்ணத்தின் வணிகப் பங்குகளை விற்பனை செய்து சுமார் 4.2 பில்லியன் டொலர் நிதியைத் திரட்ட ஃபிஃபா திட்டமிட்டிருந்தது.
பிஃபா மறுப்பு
இருப்பினும், பல்வேறு தரப்பிலிருந்து எழுந்த கடும் எதிர்ப்புக் காரணமாக இந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, இன்ஃபான்டினோ அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றதாகவும், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த குற்றச்சாட்டுகளை "முற்றிலும் கற்பனையானவை" என்று வர்ணித்துள்ள ஃபிஃபா, ஜியானி இன்ஃபான்டினோ சமீப நாட்களில் அமெரிக்க ஜனாதிபதியையோ அல்லது அவரது நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களையோ தொடர்புகொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த ஒப்பந்த விவகாரத்தால் ஃபிஃபா தலைவர் பதவியில் இன்ஃபான்டினோ தொடர்வது குறித்து கால்பந்து அமைப்புகளிடையே தொடர்ந்து விவாதங்கள் வலுத்து வருகின்றன.