SLIIT NorthernUniயிடம் இருந்து தொழில்வாய்ப்புடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த பட்டபடிப்பு
SLIIT NorthernUni ஆனது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்வாய்ப்புடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த பட்டபடிப்பினை மாணவர் நலன் பெறும் வகையில் சிறப்புற யாழ் மண்ணில் வழங்கிக் கொண்டிருக்கின்றது.
SLIIT Business School னுடைய கற்கைநெறிகளானது கல்வி அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்ட கற்கை நெறிகளாகவும், Association to Advance Collegiate Schools of Business (AACSB) யின் அங்கத்துவத்தை பெற்றுள்ளமையினாலும் இக்கற்கை நெறிகளின் தரம் உலகத்தரம் வாய்ந்தது என்றால் மிகையாகாது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியில் சிறப்புத்தேர்ச்சி ஏய்திய மற்றும் படிப்பில் சிறந்து விளங்கும் முன்னிலையில் இருக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாதாந்த ஊக்குவிப்பு தொகையுடன் கூடிய புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றது.
மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
அது மட்டுமின்றி SLIIT NorthernUniயின் கற்கைநெறிகளில் ஆண்டுதோறும் சிறந்து விளங்கி முன்னிலையில் இருக்கும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
சிறந்த பெறுபேறுகள் பெற்றும் பல்கலைகழக அனுமதி கிடைக்காத மாணவர்கள் அனைவராலும் செலுத்தக்கூடிய கட்டணங்களில் சிறந்த பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
அத்தோடு வறுமை கோட்டின் கீழ் உள்ள, குறைந்த வருவாய் பெறும் மாணவர்களும் இடையூறுகள் இன்றி அவர்களின் உயர்கல்வியை தொடர YARL EDUCATION SUPPORT FUNDஇன் கல்விக்கடன் வசதி உறுதுணையாக திகழ்கின்றது.
கல்வியை மேம்படுத்துவதனை நோக்காக கொண்டு இயங்கி வரும் SLIIT NorthernUni இன்னொரு படி மேலே சென்று MANAGE FEST எனும் பாடசாலை மாணவர்களுக்கான நுண்திறன் போட்டிகளை நவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி நடத்திக்கொண்டு இருக்கின்றது.
இவ் நுண்திறன் போட்டி குழுமுறை போட்டிகளையும் தனியாள்முறை போட்டிகளையும் தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது.
நுண்திறன் போட்டி
மாணவர்களுக்கான அறிவு (Knowledge), திறன் (Skill), மற்றும் நேர்மய மனப்பாங்கு (Positive Attitude) என்பனவற்றை விருத்தி செய்யும் நோக்கில் உருவாக்கம் பெற்ற ஓர் நுண்திறன் போட்டியாக அமைந்துள்ளது.
MANAGE FEST ஆனது நுண்திறன் போட்டிகளில் திறன்பட பங்கு பற்றிய வர்த்தக துறை மாணவர்களுக்கு உயர்தரத்தினை எதிர்கொள்ள முன்னரே புலமைப்பரிசிலுக்கு தெரிவாகின்ற அரிய சந்தர்ப்பத்தினை உருவாக்கியுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகளில் வர்த்தக துறையில் பயிலும் மாணவர்களுக்கான அளப்பெரிய சந்தர்ப்பமாக இந்த MANAGE FEST அமைந்துள்ளது. உயர்தர பரிட்சைக்கு முன்னரே தம் நுண்ணறிவு திறனை பரிசீலித்து பார்ப்பதற்கான முன்னாயத்தம் எனவும் கூறலாம்.
MANAGE FEST னுடைய போட்டிகள் பற்றி நோக்கும் போது, உயர்தர வர்த்தக பிரிவை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக நவீன தொழில் நுட்பங்களை (Kahoot.lk) கொண்டு வடிவமைக்கப்பட்ட குழுமுறை மற்றும் தனியாள் முறை போட்டிகள் காணப்படுகின்றன.
இப் போட்டிகளில் பங்கு பற்றுகின்ற பாடசாலை மாணவர்கள் முதலில் குழுவாகக் கலந்து கொண்டு குழுவின் செயற்திறன் அடிப்படையில் வெற்றி பெறுவார். பின்னர் அதே போன்று குழுக்களில் இருந்து ஒருவரை தெரிவு செய்து அக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பங்குபற்றி செயற்திறன் அடிப்படையில் வெற்றி பெற்ற ஒருவர் தெரிவு செய்யப்படுவர்.
அவ்வாறு வெற்றி பெற்று உயர் புள்ளிகளை பெற்ற மாணவர் SLIIT NorthernUni யால் வழங்கப்படும் MANAGE FEST Best scorer scholarship திட்டத்தின் கீழ் மாதாந்த ஊக்கத்தொகையுடன் முழுமையான புலமைப்பரிசில் பெற்று எமது நிறுவனத்தில் கல்வியை முன்னெடுப்பதற்கான வாய்ப்பிற்கு தகுதி பெறுவார்.
பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டிகள்
இங்கு MANAGE FEST போட்டிக்காக வடிவமைக்கப்பட்ட வினாக்கள் ஒவ்வொன்றும் உயர்தர பரீட்சைக்கான மீள் பார்வையாக அமைந்திருக்கும் என்றால் மிகையாகாது. இத்தகைய ஓர் அரிய சந்தர்ப்பம் திறமைக்கும் கல்விக்கும் முன்னுரிமை கொடுக்கும் செயற்பாடாகும். கடந்த வருடம் முதல் முறையாக நடை பெற்ற MANAGE FEST போட்டியானது மிகச் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
இதன் போது வடக்கு மற்றும் கிழக்கை சேர்ந்த 15 பாடசாலைகளின் 80 மாணவர்கள் பங்குபற்றி இருந்தனர்.
அதன்போது பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் குழுக்களாகவும் தனியாகவும் ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கெடுத்திருந்தனர்.
இப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழுவிற்கு எமது chairman திரு. இந்திரகுமார் பத்மநாதன் மற்றும் அவரது துணைவி திருமதி ரம்பா இந்திரகுமார் அவர்களால் உயர் புள்ளிகளை பெற்ற குழுக்கள் அடிப்படையில் முதலாவது இடத்தை பெற்ற குழுவுக்கு 100000 ரூபாய் பணப்பரிசும், இரண்டாம் இடத்தை பெற்ற குழுவுக்கு 75000,ரூபாய் பணப்பரிசும் மூன்றாவது இடத்தை பெற்ற குழுவுக்கு 50000 ரூபாய் பணபரிசும் வழங்கி தனியாள் முறை போட்டிகளில் வெற்றியீட்டிய யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியை சேர்ந்த செல்வி சண்முகி கருணாநிதி அவர்களுக்கு மாதாந்த ஊக்கத்தொகையுடன் கூடிய முழு அளவிலான புலமைப்பரிசில் வழங்கி எம் நிறுவனத்தில் வணிக கற்கையினை தொடர்வதற்கான வாய்ப்பும் வழங்கி கௌரவிப்பு இடம் பெற்றிருந்தது.
SLIIT NorthernUni ஆல் நிகழ்த்தப்படும் MANAGE FESTஆனது வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு அவர்களின் திறன்களை மதிப்பிட கிடைத்த வரபிரசாதம் ஆகும்.
Visit our website:- https://northernuni.lk/
மேலும் தகவல்களுக்கு :- 0771471471
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |