இலங்கை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் உலக வங்கி கூறியுள்ள விடயம்
இலங்கையில் உயர்ந்துள்ள நிதி, வெளி மற்றும் நிதித்துறையின் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிலையற்ற அரசியல் நிலைமை என்பன நாட்டின் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துவதாக உலக வங்கி தெரிவிக்கிறது.
இலங்கை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் உலக வங்கி இதனை குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்திற்கான மூல காரணங்களைத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டு காட்டியுள்ள உலக வங்கி, நெருக்கடி மற்றும் எதிர்கால நெருக்கடிகளைத் தடுக்க வலுவான மற்றும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை உருவாக்குதல் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் 2023இல் 4.3 சதவீதமாக சுருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேவை தொடர்ந்து குறைந்து வருவதால், வேலை மற்றும் வருமான இழப்புகள் தீவிரமடைகின்றன, மற்றும் விநியோகத் தடைகள் மோசமாக உள்ளன.
பொருளாதார சவால்கள்
இது உற்பத்தியை பாதிக்கும் என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. இது 2023க்கு பிறகும் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்தும். இந்த நிலையில் தற்போதைய நெருக்கடியை, வெளிப்புற நிதி ஆதரவின் மூலம் தீர்க்க முடியும்.

அத்துடன் இவ்வாறான நெருக்கடியானது சாதாரண சூழ்நிலைகளில் கடினமான, ஆழமான மற்றும் நிரந்தரமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை செயல்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
எனவே இந்த சந்தர்ப்பத்தை இலங்கை பயன்படுத்தி கட்டமைப்பு சீர்திருத்தங்களை
மேற்கொள்ளவேண்டும் என்றும் உலக வங்கி வலியுறுத்துகிறது.
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam