வலுவிழந்து வரும் டொலரின் பெறுமதி - நாட்டின் பொருளாதாரம் குறித்து தகவல்
2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகள் காணப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன் நாடு 2.2% மிதமான பொருளாதார வளர்ச்சியை காட்டுவதாக உலக வங்கி கணித்துள்ளது.
பாரிய பொருளாதார வீழ்ச்சி
2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்நோக்கிய பாரிய பொருளாதார வீழ்ச்சியின் பின்னரே இந்த நிலைமையை காண முடிவதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், நாட்டில் இன்னும் உயர் வறுமை, வருமான சமத்துவமின்மை மற்றும் தொழிலாளர் சந்தை பிரச்சினைகள் காணப்படுவதாக உலக வங்கியின் சமீபத்திய ஈராண்டு வளர்ச்சி மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
304 ரூபாவாக மாற்றமடைந்த டொலரின் பெறுமதி
இதேவேளை ,இன்றையதினம் (03.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (03.04.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.60 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.24 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |