இலங்கையில் தொழிலை இழந்துள்ள சுமார் ஐந்து இலட்சம் பேர்! உலக வங்கி
இலங்கையில் சுமார் ஐந்து இலட்சம் பேர் தொழிலை இழந்துள்ளதாக உலக வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
கைத்தொழிற்துறை மற்றும் சேவைத்துறை போன்றவற்றில் கடமையாற்றி வந்த பெண்கள் அதிகளவில் தொழில்களை இழந்துள்ளனர்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய வலயத்தின் துணைத் தலைவர் மார்டின் ரைசர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
வறுமையின் அளவு உயர்வு
கடந்த 2021ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் வறுமையின் அளவு 13 வீதத்திலிருந்து 25 வீதமாக உயர்வடைந்துள்ளது.
நகரங்களில் வறுமை நிலைமை 5 வீதத்திலிருந்து 15 வீதமாக உயர்வடைந்துள்ளது. மக்களின் வாழ்க்கைச் செலவு வெகுவாக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சில தசாப்தங்களாக இலங்கையில் பின்பற்றப்பட்டு வரும் பிழையான பொருளாதார கொள்கைகளினால் நாடு பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.