நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு
தகவல்கள் உறுதிப்படுத்திக்கொள்ள எவ்வாறு புதிய தொழிநுட்பத்தினை பயன்படுத்துவது தொடர்பாக இலங்கை பத்திரிகை ஸ்தாபனம்; நுவரெலியாவில் செயலமர்வு ஒனறினை தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஒழுங்கு செய்திருந்தது.
இன்று உலகில் வளர்ந்து வரும் அதி நவீன தொழிநுட்பங்களை கொண்டு உருவாக்கப்படும் போலியான செய்திகள் குரல் பதிவுகள் கானொளிகள், புகைப்படங்கள் எவ்வாறு நவீன தொழிநுட்பத்தின் மூலம் இனங்காண்பது மக்களுக்கு சரியான கானொளிகள் புகைப்படங்கள் தொடர்பாக எவ்வாறு பெற்றுக்கொடுப்பது தரவுகளையும் சரியான தகவல்களையும் எவ்வாறு வலைத்தளங்கள் ஊடாக பெற்றுக்கொள்வது தொடர்பான விழிப்பூட்டும் செயலமர்வு வெகுசன ஊடக நிறுவனத்தின் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாட்டில் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நுவரெலியாவில் நடைபெற்றது.
பத்திரிகை ஸ்தாபனம்
இதன் போது அண்மையில் இந்தியாவில் சிறுத்தையொன்று நாய் ஒன்றினை பிடித்து செல்லும் கானொளியினை தரவிறக்கம் செய்து இலங்கையில் மஸ்கெலியாவில் இடம்பெற்றதாக செய்தியினை உருவாக்கி பிரதான தொலைகாட்சிகளில் செய்தியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்ட விடயம் இந்த செயலமர்வில் பேசும் பொருளாக மாறியதுடன் செய்தியினை கொண்டு இதன் உண்மை தன்மை வெளிக்கொண்டுவரப்பட்டது.
இதே நேரம் கூகுல் சேர்ச் என்ஜின் மூலம் பெற்றுக்கொடுத்திருக்கும் சேவைகள்.,பயன்பாடுகள் தொடர்பாக தெளிவாக விளக்கமளிக்கப்பட்டன.
இந்த செயலமர்வின் பயிற்றுவிப்பாளராக இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கசுன் குமாரகே, ஊடகவியலாளரும் பயிற்றுவிப்பாளருமான சாமர சம்பத் மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் சிங்கள தமிழ் ஊடகவிலாளர்கள் கலந்து கொண்டனர்.