யாழில் தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டு விநியோகிக்கும் அலுவலர்களுக்கான செயலமர்வு
நாடாளுமன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டு விநியோக்கும் அலுவலர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றையதினம் (21.10.2024) இந்த செயலமர்வு நடைபெற்றுள்ளது.
இதன்போது, கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், இந்த ஜனாதிபதித் தேர்தல் நீதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தமது நன்றிகளை கூறியுள்ளார்.
கடமைகள் மற்றும் பொறுப்புக்கள்
அத்துடன், தபால் மூலமான வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுக்கள் மற்றும் உரிய ஆவணங்களை பொதியிட்டு விநியோகிக்கும் கடமையானது ஒரு குழுக்கடமையாகும் என்பதால் கடமைகளில் ஈடுபடும் அலுவலர்கள் வினைத்திறனாக செயற்பட்டு ஒத்துழைப்பு நல்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு கடமைகளில் ஈடுபடவுள்ள
அலுவலர்களுக்கான
கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் இ.கி.அமல்ராஜால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
