தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னைய நிலைப்பாட்டில் இருந்து மாற்றம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் முன்னைய நிலைப்பாடுகளில் இருந்து முற்றிலும் மாறியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன விமர்சித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள் எதிர்க்கட்சியில் இருந்த போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை பகிரங்கப்படுத்துமாறு கோரிக்கை வைத்தார்கள்.
அறிக்கைகளை
குறித்த ஆணைக்குழுக்களுக்கு பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து செலவழிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் அறிக்கை குறித்து அறிந்து கொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு இருப்பதாக அப்போது அவர்கள் வாதிட்டார்கள்.
ஆனால், இப்போது அதிகாரத்துக்கு வந்தபிறகு குறித்த அறிக்கைகளை அவர்கள் தொடர்ந்தும் மறைத்து வைத்திருக்க விரும்புகின்றனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் தொடர்பில் அந்த அறிக்கைகளி்ல் குற்றம் சாட்டப்பட்டிருப்பதன் காரணமாகவே அவர்கள் இவ்வாறு நடந்து கொள்ளத் தலைப்படுவதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது.
உண்மையான குற்றவாளிகள்
அதன் மூலம், தங்களுக்கு ஆதரவானவர்களை பாதுகாப்பதில் தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள் அக்கறை கொண்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.
எனவே, உண்மையான அவ்வாறான நிலைப்பாடுகளை விடுத்து, உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |