தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக லிந்துலை மட்டுக்கலை தொழிலாளர்கள் போராட்டம் முன்னெடுப்பு
தலவாக்கலை பெருந்தோட்டத்துக்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த சின்ன மட்டுக்கலை, பெரிய மட்டுக்கலை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லாமல் தொழில் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மட்டுக்கலை தொழிற்சாலைக்கு முன்பாக பதாதைகளை ஏந்திவாறு, கறுப்புக் கொடிகளைப் பிடித்து, கோஷங்களை எழுப்பியவாறு இன்று (14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 8 மணி முதல் பகல் 11 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தால் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும், தேயிலை மலைகள் காடாகி கிடப்பதாகவும், கொழுந்து விளைச்சல் குறைவாக இருப்பதால் தற்போது தோட்ட நிர்வாகம் ஒரு நாள் சம்பளத்திற்கு 20 கிலோ கட்டாயமாகப் பறிக்க வேண்டுமெனவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நல்ல கொழுந்து எடுத்துக் கொடுக்க வேண்டுமெனத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதோடு குறைவாகக் கொடுத்தால் கிலோ கணக்கில் சம்பளம் தருவதாகவும், இதனால் தொழில் ரீதியாக பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் தோட்ட அதிகாரி முறையாகத் தோட்டத்தை வழி நடத்தவில்லை எனத் தெரிவித்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தம் இல்லாத காரணத்தினால் பல சிரமங்களை எதிர் நோக்குவதாகக் கூட்டு ஒப்பந்தத்தை மீண்டும் வேண்டும் எனவும் பேச்சுவார்த்தைகளை சும்மா நடத்தாமல் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக் கொண்டதுடன், தமக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் இதுவரை முறையாகக் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் குறித்த தோட்டங்களை
நடத்த முடியாவிட்டால் தமக்கு வழங்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
கேட்டுக்கொண்டனர்.





நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 21 மணி நேரம் முன்
குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan
19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் Cineulagam