கிளிநொச்சி வைத்தியசாலையில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை (Photos)
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளரின் ஏற்பாட்டில் இன்று(19.05.2023) காலை 7.00 மணியளவில் சிரமதான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய இடங்களான குப்பைகள், வெற்றுப் போத்தல்கள், நீர் தேங்கக் கூடிய இடங்கள் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டதுடன் பெருமளவான திண்மக் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு கரைச்சி பிரதேசசபையினரின் உதவியுடன் அகற்றப்பட்டுள்ளது.
டெங்கு ஒழிப்பு செயற்றிட்டங்கள்
இதன்போது டெங்குக் கட்டுப்பாட்டுச் சிரமதானத்திற்காக பயன்படுத்தும் உபகரணங்களை கிளிநொச்சி வர்த்தகர் சங்கம் வழங்கி வைத்துள்ளது.
மேலும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, கிளிநொச்சி மாவட்ட செயலகம், சிவில் பாதுகாப்பு திணைக்களம், கரைச்சி பிரதேச சபையினர் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |











