இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி - அனைத்து துறையினரும் வீட்டில் இருந்து பணியாற்றும் நடைமுறை
இலங்கையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருவதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில் அரசாங்கம் இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்க டொலர்
அதற்கமைய, வெகுவிரைவில் இந்த நடைமுறை நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்ப்பதாக பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிபொருளுக்காக மாதத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட நேரிடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலப்பகுதி முதல் தற்போது வரையில் பல மில்லியன் டொலர் எரிபொருளுக்காக செலவிடப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன், பல நாடுகளில் வீட்டில் இருந்து பணியாற்றும் செயற்பாடு நடைமுறைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam