வீட்டில் இருந்து வேலை..! பொது மக்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் முறையாக அறிவிக்கப்படும் - அமைச்சர் தகவல்
அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இதுவரை எந்தவொரு இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டவுடன், அது குறித்துப் பொதுமக்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் முறையாக அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து தமது அன்றாடக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
பதிலடி கற்பனைக்கு எட்டாத கடுமையாக இருக்கும்: ஈரான் அதிரடி எச்சரிக்கை - அண்டை நாட்டு அமெரிக்க தளங்களும் இலக்கு
தற்போதைய சூழலில் அரச நிறுவனங்களின் நாளாந்த செயற்பாடுகளை எவ்வாறு வினைத்திறனாக முன்னெடுப்பது என்பது குறித்துத் துறைசார் அதிகாரிகளுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலாம் இணைப்பு
அரச ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து உடனடி முடிவு எடுக்கப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படும்.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (16.03.2026) இந்த விஷயத்தில் ஒரு முக்கிய விவாதம் நடைபெற உள்ளது.
மேலும் இது எதிர்காலத்தில் தொலைதூர வேலை ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்வதில் ஒரு தீர்க்கமான படியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam