10000 பெண்களுடன் மட்டக்களப்பில் கொண்டாடப்பட்ட மகளிர் தின நிகழ்வு
மட்டக்களப்பு - கல்லடி பூங்கா மைதானத்தில் 10,000 பெண்களுடன் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நேற்று(11.203.2024) நடைப்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் இந்தியாவின் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட்டின் இணை நிறுவனரும் இயக்குனருமான சுசித்ரா எல்ல அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளார்.
விருது வழங்கும் நிகழ்வு
இதன்போது கோவிட் காலப்பகுதியில் கோவிட் தடுப்பூசியை கண்டுபிடித்து, 600 மில்லியன் கோவிட் தடுப்பூசிகளை தயாரித்து மக்கள் உயிரை காத்த உன்னத பெண்ணான சுசித்ரா எல்ல ஆளுநரால் கௌரவிக்கபட்டுள்ளார்.
அத்துடன் மட்டக்களப்பு கல்வி துறையில் சாதித்த பெண்கள், Rural development society, பெண்கள் அமைப்புகள் போன்ற பல சாதனைகளை நிலைநாட்டிய பெண்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கலை கலாசார நிகழ்வுகள் மற்றும் சாதனை படைத்த பெண்களை கௌரவிக்கும் முகமாக விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றதுடன், அமைச்சர் வியாழேந்திரனினால் சிறப்புரை ஆற்றப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், செய்யட் அலி சாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பீ.எஸ். ரத்நாயக்க, ஆளுநரின் செயலாளர் எல். பீ. மதநாயக்க, மட்டக்களப்பு அரசாங்க அதிபர் உட்பட அரச உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
