எட்டாவது மகளிர் டி-20 உலகக் கிண்ண சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டி இன்று
8 ஆவது மகளிர் டி20 உலகக் கிண்ண சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணியும் போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்க அணியும் இன்று மோதவுள்ளன.
இப்போட்டி தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் இலங்கை நேரப்படி இன்று (26.02.2023) மாலை 06.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அவுஸ்திரேலிய அணி 6 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆவலில் இப்போட்டியில் களமிறங்கியுள்ளது.
05 தடவைகள் சம்பியன்
10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் அவுஸ்திரேலியா (8 புள்ளி) முதலிடமும், தென் ஆப்பிரிக்கா (4 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து (8 புள்ளி) முதலிடமும், இந்தியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
கேப்டவுனில் நடந்த முதலாவது அரையிறுதியில் அவுஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதின. இதில் 5 முறை சாம்பியனான அவுஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அவுஸ்திரேலிய மகளிர் அணி இருபதுக்கு 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு 06 தடவைகள் தகுதி பெற்றுள்ளதுடன் 05 தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
தென்னாப்பிரிக்க மகளிர் அணி உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேதியில் பிறந்தவங்க துணைக்காக எதையும் துணிச்சலாக செய்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
