முல்லைத்தீவில் இடம்பெற்ற மகளிர் தின விளையாட்டு விழா
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் தாமரை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் மகளிர் தின விளையாட்டு போட்டி நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விளையாட்டுப்போட்டிகள் நேற்று முன்தினம்(30.03.2024) இடம்பெற்றுள்ளது.
விளையாட்டு நிகழ்வு
அத்துடன் இவ்விளையாட்டு நிகழ்வினை தாமரை சுய உதவிக் குழுவும் ஏனைய மகளிர் சுய உதவிக் குழுக்களும் இணைந்து நடாத்தியுள்ளது.
இதன்போது வயது வேறுபாடின்றி இல்ல விளையாட்டுப் போட்டிகள் போன்றே தமது சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களை முல்லை, தளிர் என இரண்டு இல்லங்களை அமைத்து குறித்த மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் பான்ட் வாத்திய அணிவகுப்பு நடத்தி, சிறப்பான இசையும் அசைவும், விளையாட்டு போட்டிகள் என மிக சிறப்பாக விளையாட்டு விழா நடைப்பெற்றுள்ளது.
மேலும் போட்டிகளின் முடிவில் வெற்றியீட்டியவர்களுக்காக விருந்தினர்களால் பரிசில்கள், கேடயங்கள் மற்றும் பணப்பரிசில்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.