வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் : பொலிஸார் விசாரணை(Video)
நுவரெலியா - லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோல்றீம் தோட்டத்திலுள்ள வீடொன்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் ஐந்து பிள்ளைகளின் தாயொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அக்கரப்பத்தனை, சின்ன நாகவத்தை தோட்டத்தை சேர்ந்த 68 வயதுடைய தாயொருவரே இன்று (21.04.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்த பெண்ணின் உடலில் பலத்த வெட்டு காயங்களும் உள்ளமையும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
திருடப்பட்ட நகைகள்
இதேவேளை, உயிரிழந்த பெண் அணிந்திருந்த நகைகள் காணாமல்போயுள்ளமையினால், நகைகளை பறிக்கும் நோக்கில் சந்தேகநபர்கள் குறித்த பெண்ணை கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுளள்னர்.
மேலும் உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri
