குவைத்தில் துன்புறுத்தல்களிற்குள்ளான 47 இலங்கை பெண்கள் நாடு திரும்பினர்!
குவைத்தில் வீட்டுப் பணிப் பெண்களாக பணிபுரிந்தபோது பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியதாகக் கூறப்படும் 47 இலங்கைப் பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இன்று (25) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்தனர்.

1,300 இலங்கை பெண்களின் நிலை
குறித்த 47 இலங்கை பணிப்பெண்களும் குவைத்தில் பணிபுரியும்போது தமது எஜமானர்களால் பல்வேறு இன்னல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகி, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதேவேளை, சுமார் 1,300 இலங்கை பெண்கள் இலங்கைக்கு வரமுடியாமல் குவைத்தில் தங்கியிருப்பதாக அந்நாட்டு இலங்கை தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வர எதிர்பார்க்கும் இவர்களை விரைவில் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam