பெண் ஒருவரை கடத்திச் சென்று நபர் ஒருவர் செய்த மோசமான செயல்
மாத்தறையில் 29 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயை பலவந்தமாக கடத்திச் சென்று அடைத்து வைத்திருந்த மீன் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்புருபிட்டிய, மஸ்தகமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டதாக மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.
மீன் வியாபாரியின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி சுமார் 6 மாதங்களாக குறித்த வீட்டில் தங்கியிருந்த மூன்று பிள்ளைகளின் தாயாரையும் பொலிஸார் கைது செய்து வாக்குமூலத்தைப் பதிவுசெய்து வைத்திய பரிசோதனைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலும், தான் அங்கிருந்து சென்றால் கணவன் மற்றும் குழந்தைகளை கொன்று விடுவதாகவும், நிர்வாண வீடியோக்களை எடுத்து இணையத்தில் வெளியிடுவேன் எனவும் மீன் வியாபாரி மிரட்டியதாகவும் அந்த பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
தலைமுடியை வெட்டு கத்தியை காட்டி பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளானதாகவும் அந்த பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தாயான இவர் பல சந்தர்ப்பங்களில் பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்ததையடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சந்தேகநபரின் வீட்டைச் சோதனையிட்ட போது, குறித்த பெண்ணை அச்சுறுத்தப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 05 மீன் வெட்டும் கத்திகள் மற்றும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, அவரது நிர்வாண காட்சிகள் பதிவாகியிருந்த கையடக்க தொலைபேசிகள் மற்றும் மெமரி அட்டைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோக்களும் தொலைபேசிகளில் இருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
36 வயதுடைய சந்தேக நபர் மூன்று பிள்ளைகளின் தாயாரின் உறவினர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.