இலங்கை வந்த விமானத்தில் பெண் பயணிக்கு நேர்ந்த கதி
டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற விமானத்தில் இந்தியர் ஒருவர் பெண் ஒருவரை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை விமான நிலைய பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண் நீர்கொழும்பை சேர்ந்த 31 வயதுடையவர் என்றும், அவர் டுபாயில் உள்ள ஒரு வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
பிட்ஸ் எயார்
இந்தப் பெண் இன்று அதிகாலை 5.25 மணிக்கு பிட்ஸ் எயார் நிறுவனத்திற்கு சொந்தமான AD-822 விமானம் மூலம் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
விமானத்தில் இருந்த 35 வயது இந்தியர் ஒருவர் குறித்தபெண்ணை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து விமானக் குழுவினரிடம் பாதிக்கப்பட்ட பெண் முறையிட்டுள்ளார்.
வாக்குமூலம் பதிவு
மேலும் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதும், விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேக நபரான இந்திய பிரஜையை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விமானக் குழுவினரிடமிருந்தும் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர், மேலும் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் இந்திய நாட்டவரும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.