பேருந்து மற்றும் தொடருந்துகளில் பெண் ஓட்டுனர்கள்
பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளில் பெண் ஓட்டுனர்களை இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(07.03.2025) நடைபெற்ற போக்குவரத்து அமைச்சுக்களுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாளை கொண்டாடப்படவுள்ள மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த கொள்கை முடிவு நடைமுறைபடுத்தப்படும் என பிமல் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலுக்கு எதிராக சர்வதேசத்தில் திட்டமிடப்பட்ட சதி! சர்ச்சைக்குரிய நேர்காணல் தொடர்பில் வலுக்கும் குற்றச்சாட்டுக்கள்
அதிகளவான பெண் ஓட்டுனர்கள்
மேலும், அடுத்த வருடத்தில் இலங்கையில் பேருந்து மற்றும் தொடருந்துகளில் பெண் ஓட்டுனர்களை காணலாம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்போது, மிகவும் குறைவாக பெண்களை ஆட்சேர்ப்பு செய்யும் இந்த துறைகளில், அதிகளவான பெண் ஓட்டுனர்கள் எதிர்காலத்தில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 15 மணி நேரம் முன்

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
