இலங்கையில் தொடரும் சோகம் - மற்றுமொரு இளம் பெண் மரணம்
அம்பலாங்கொட நகரில் மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொட, உரவத்த பிரதேசத்தில் வசிக்கும் லகீஷா யசஸ்வி என்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அம்பலாங்கொட மாநகர சபையில் வருவாய் நிர்வாகியாக கடமையாற்றுகின்றார்.
தனது மகளை ஆரம்ப பாடசாலையில் விடுவதற்காக அம்பலாங்கொட, உரவத்தையில் உள்ள தனது வீட்டிலிருந்து கொழும்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் லொறியின் பக்கவாட்டில் மோதியல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.