கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட பெண் : சந்தேக நபர்கள் கைது
கொழும்பு (Colombo) புறநகர் பகுதியில் வீடொன்றில் வைத்து பெண் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் குறித்த பெண்ணின் உறவினர் உள்ளிட்ட இருவர் கடுவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடுவெல, கொரத்தோட்டை, பட்டியவத்த வீதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட உறவினர், உயிரிழந்த பெண்ணின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசித்து வருபவராகும்.
பெண்ணின் சடலம் மீட்பு
கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கு 38 வயதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவருடன் கைது செய்யப்பட்டுள்ள மற்றைய நபர் சந்தேகநபரின் வீட்டிற்கு பழுதுபார்க்க வந்தவராகும்.

இதன்போது, இரண்டு பிள்ளைகளின் தாயான அஜந்தா கடுகம்பலா என்ற பெண் கடந்த புதன்கிழமை காலை தனது வீட்டில் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் அணிந்திருந்த சில தங்க ஆபரணங்களும் காணாமல் போயிருந்ததாகவும், சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் உயிரிழந்த பெண்ணின் கைத்தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri