யாழ்ப்பாணத்தில் எட்டு பெண்கள் கைது
யாழ்ப்பாணத்தில் ஆலயங்களில் தங்க நகை திருட்டில் ஈடுபட்டு வந்த 8 பெண்கள் கொண்ட குழுவை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதான பெண்களில் இருவர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
கைதான குழு நல்லூர் கந்தசுவாமி ஆலயம், மடு மாதா தேவாலயத் திருவிழாக்களை இலக்கு வைத்தே வடக்குக்கு வந்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நகைக் களவில் ஈடுபட்ட குழு
ஆலயத் திருவிழாக்களில் பொதுவாக வடக்கில் பெண்கள் அதிகளவில் தங்க நகைகளை அணிந்து வருவது வழமை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே மேற்படி குழு நகைக் களவில் ஈடுபட்டது என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், மடு மாதா தேவாலயத் திருவிழாவில் 10 இற்கும் மேற்பட்ட பெண்களின் தங்க நகைகள் களவாடப்பட்டன. இவற்றின் பெறுமதி சுமார் 75 இலட்சம் ரூபாயிலும் அதிகமாகும்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஆண்கள் இருவரும் பெண்கள் நால்வரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பொலிஸ் விசாரணை
யாழ்ப்பாணத்தில் கைதான பெண்கள் குழுவுக்கும் மடுவில் கைதான பெண்கள் குழுவுக்கும் தொடர்பு உள்ளது என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இந்தியப் பெண்களுடன் கைதானவர்கள் குறி சொல்லும்தொழிலில் ஈடுபடுபவர்கள். அவர்கள் சிலாபம், தம்புதேகம பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
