பொலிஸ் குழுவினர் மீது பெண்கள் கடும் தாக்குதல்: இரு அதிகாரிகள் படுகாயம்
களுத்துறை - போமுவெல பிரதேசத்தில், சட்டவிரோதமாகக் கசிப்பு காய்ச்சும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்தவர்களைக் கைது செய்வதற்காகச் சென்ற பொலிஸ் குழுவினர் மீது சந்தேக நபரும், பெண்கள் மூவரும் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் படுகாயமடைந்த நிலையில் நாகொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.
பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருமே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் மூவரும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
போமுவெல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தித் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து விசேட சுற்றிவளைப்பு குறித்த பொலிஸ் குழுவினர் மேற்கொண்டனர்.
இதன்போது கசிப்புடன் ஒருவரைக் கைதுசெய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவர
முற்பட்டபோது சந்தேக நபரும் பெண்கள் மூவரும் இணைந்து பொலிஸ் அதிகாரிகளின்
கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளதுடன், பொலிஸ் அதிகாரிகளையும் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து நால்வரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
