வெளிநாட்டிலிருந்து தங்கத்துடன் வந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், மடிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை சட்டவிரோதமாக கொண்டு வந்து, தீர்வை வரி செலுத்தாமல் வெளியேற முயற்சித்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பெண் மத்தேகொட பகுதியில் வசிக்கும் 63 வயதுடைய வர்த்தகர் என தெரியவந்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
அவர் நேற்று காலை 07.30 மணிக்கு டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் வந்தடைந்தார்.
சந்தேக நபர் கொண்டு வந்த பைகளில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 23 தங்க சங்கிலிகள், ஒரு தங்கக் கட்டி, 03 வளையல்கள், ஒரு ஜோடி காதணிகள் மற்றும் கைசங்கியிகள், 06 மடிக்கணினிகள் மற்றும் 11 கையடக்க தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
தங்கம் மீட்பு
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு பிரதேச புலனாய்வுப் பிரிவிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.
சந்தேக நபரான பெண் சட்டவிரோதமாக கொண்டு வந்த பொருட்களும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
