கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இளம் பெண்!
இந்தியா (India) - பெங்களூரில் இருந்து சட்டவிரோதமாக குஷ் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் (19) சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு 10 ஐ சேர்ந்த இளம் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த சந்தேகநபர் சுங்க வளாகத்தின் வழியாக செல்ல முயன்றபோது போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, செயற்கையாக வடிவமைக்கப்பட்ட மரப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 3 கிலோகிராம் 290 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பறிமுதல் செய்யப்பட்ட குஷ் போதைப்பொருளின் மதிப்பு 33 மில்லியன் ரூபாய் என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேக நபரும், போதைப்பொருளும் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
