கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் சுமார் 6 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இலத்திரனியல் சிகரெட்டுகளை கொண்டு வந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளியே பொருட்களை கொண்டு செல்ல முயன்ற பெண்ணை, விமான நிலைய போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
இலத்திரனியல் சிகரெட்டுகள்
கைது செய்யப்பட்ட பெண் கொழும்பு, பிலியந்தலை பகுதியை சேர்ந்த 32 வயதுடையவர் எனவும் அவர், பயண முகவராக பணிபுரிவதாகவும் தெரியவந்துள்ளது.
அவர் கொண்டு வந்த இரண்டு பொதிகளில் 455 இலத்திரனியல் சிகரெட்டுகள் மட்டுமே இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரான பெண், மேலதிக விசாரணைக்காக இன்று கட்டுநாயக்க நாயக்கந்த சுங்கத் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.