யாழில் விமானப் படை கண்காட்சிக்கு சென்ற பெண் கைது
யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இரண்டு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் விமானப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை விமானப்படையின் 73ஆவது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ். முற்றவெளி மைதானத்தில் இடம்பெற்றுவருகிறது.
கஞ்சாவுடன் கைது
இதன்போது, கண்காட்சிக்கு பொதியுடன் வந்த பெண்ணை, பிரதான நுழைவாயிலில் சோதனையிட்ட போதே கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் நயினாதீவைச் சேர்ந்த 26 வயதான பெண் என தெரியவந்துள்ளது .
இவரிடமிருந்து இரண்டு கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை விமானப்படையினர் மீட்டுள்ளனர்.
குறித்த பெண், யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

கதிர் சட்டையை பிடித்த குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
