இலங்கையில் பலரை ஏமாற்றி மோசடி செய்த பெண்
நாரஹேன்பிட்டியில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளித்து, 1,340,000 ரூபாயை மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த 03 முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதற்கமைய, நேற்று மாலை நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு வந்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பண மோசடி
சந்தேக நபர் வெள்ளவத்தையில் வசிக்கும் 45 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
பெண்ணிடம் மேலும் விசாரணை நடத்தியபோது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளித்து பணத்தை மோசடி செய்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம், வெள்ளவத்தை, வாதுவ, மீகஹவத்த, ஹபராதுவ மற்றும் கிரியுல்ல ஆகிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.





கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri
