கோடிக்கணக்கான ரூபா பண மோசடி - வசமாக சிக்கிய பெண்
ஜப்பானில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் கோடிக் கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடுவெல கொரதொட்ட பகுதியில் வைத்து நவகமுவ பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
நவகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த இருவரிடம் எட்டு லட்சம் ரூபா பணம் மோசடி செய்ததாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்து குறித்த பெண்ணிடம் விசாரணை நடாத்திய போது ஜப்பானில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நாட்டின் பல பாகங்களிலும் பலரிடம் கோடிக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
மோசடிகள் தொடர்பில் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் 32 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதுடன், இந்த வழக்குகளில் முன்னிலையாகாமை தொடர்பில் 17 பிடிவிராந்து உத்தரவுகளும் இந்தப் பெண்ணுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தெஹியோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான பெண் ஒருவரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
