சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு செல்ல முற்பட்ட பெண் பலி
பிரான்சில் (France) இருந்து பிரித்தானியாவுக்குள் (Britian) சிறிய படகொன்றின் மூலம் நுழைய முற்பட்ட பெண் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
அத்துடன், குறித்த பெண்ணுடன் பயணித்த ஏனைய 37 பேர் அவசர உதவிக் குழுக்களால் மீட்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு கடலோர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக இவ்வாறு சிறிய படகுகளில் பிரிட்டிஷ் கால்வாயை கடக்க முற்படும் முயற்சிகள் அதிகரித்துள்ளன.
மீட்புப் பணியில் பொலிஸார்
இந்த வருடத்தில் மாத்திரம் 15,000 நபர்கள் வரை பிரிட்டிஷ் கால்வாயை கடந்துள்ளதாக பிரித்தானிய தரப்பு தரவுகளின் மூலம் தெரியவருகின்றது.
இந்த ஒருவார காலத்தில் மட்டும் 1,500 நபர்கள் பிரிட்டிஷ் கால்வாயை கடந்துள்ளனர். அதேவேளை, இந்த காலகட்டத்தில், 1,000இற்கும் மேற்பட்ட நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நேற்றையதினம் மாத்திரம் 6 படகுகளில் 370 நபர்கள் பிரிட்டிஷ் கால்வாயை கடந்துள்ளனர். இவற்றுள் ஒரு படகு சிக்கலில் மாறியிருப்பதை கண்டுபிடித்த பிரெஞ்சு கடலோர பொலிஸார், உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மயங்கிய நிலையில் பெண்
அத்துடன், குறித்த படகினை நெருங்கியபோது மயங்கிய நிலையில் பெண் ஒருவரை கண்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து, அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |