இந்திய பிரதமரை கொல்லப்போவதாக அச்சுறுத்திய பெண் கைது: மும்பையில் சம்பவம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்லப் போவதாக அச்சுறுத்தல் விடுத்த பெண் ஒருவரை மும்பை பொலிஸார் கைது செய்துள்ளனர். மும்பை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இந்த அச்சுறுத்தல் நேற்று கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து, மும்பை பொலிஸ் குழு ஒன்று, குறித்த பெண்ணை கண்காணித்து விசாரணைக்காக அவரை கைது செய்ததாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
எனினும், விசாரணைக்குப் பிறகு, அந்தப் பெண் மனநிலை சரியில்லாதவர் என்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்றும் மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகள்
முன்னதாக, கடந்த நவம்பர் 12ஆம் திகதியன்று நடிகர் சாருக்கானை மிரட்டிய வழக்கு தொடர்பாக சத்தீஸ்கரை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரை மும்பை பந்த்ரா பொலிஸார் கைது செய்து வழக்கை தாக்கல் செய்தனர்.
லோரன்ஸ் பிஸ்னாய் குழுவில் இருந்து சக நண்பரும் பொலிவுட் நடிகருமான சல்மான் கானுக்கு தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சாருக்கானுக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
