பெண் ஒருவர் செய்த மோசமான செயல்: குற்றத்தடுப்பு பிரிவு எடுத்துள்ள நடவடிக்கை
கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்று மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (14.07.2023) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில் 35 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு- கொலன்னாவ பிரதேசத்திலுள்ள கந்தவாக்க பிரதேசத்தில் இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதாகக் கூறி 57 இலட்சம் ரூபா பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளதாகப் பெண் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல பிரதேசங்களில் பண மோசடி
சந்தேக நபரான பெண், அங்கொட, ஹிம்புட்டானை, முல்லேரிய புதிய நகரம் ஆகிய பகுதிகளில் அலுவலகத்தை நடத்தியதுடன், அதன் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இதேவேளை, ஹொரணை, களுத்துறை மற்றும் பல பிரதேசங்களில் பண மோசடி செய்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
சந்தேக நபருக்கு நிலையான முகவரி இல்லை எனவும் சந்தேகநபர் ஒருவர் மூலம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலத்தைப் பதிவு செய்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
