கல்வி மறுசீரமைப்பு கட்டாயம் நடக்கும் - அநுர திட்டவட்டம்
பெற்றோருக்குச் சுமையையும் பிள்ளைகளுக்குத் துயரத்தையும் கொடுக்காத ஒரு கல்வி முறையை நாட்டில் உருவாக்கப் போவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் மாணவர் தலைமுறைக்கு சர்வதேசத்தை வெல்லக்கூடிய நவீன கல்வி முறை அவசியம் என்றும், கிராமிய பிள்ளைகளை வறுமைச் சுழற்சியில் இருந்து மீட்கக்கூடிய ஒரே வழி கல்வி மட்டுமே என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி மறுசீரமைப்பு செயல்முறை
பொய்ப் பிரசாரங்களுக்கு அடிபணியாமல், நாட்டுக்குத் தேவையான கல்வி மறுசீரமைப்பு செயல்முறையைத் தொடர்ந்து முன்னெடுத்து, மாணவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் ஆணை வழங்கிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அதேவேளை, அனர்த்தத்துக்குப் பிறகு இருந்த நிலையை விடவும் ஒரு சிறந்த நாட்டையும், மக்கள் வாழ்வையும் கட்டியெழுப்பும் திட்டத்தை அரசு தற்போது வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை அடையாளப்படுத்தும் வகையில் வீடொன்றுக்கு அடிக்கல் நாட்டிய ஜனாதிபதி, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கும் நிகழ்விலும் இணைந்து கொண்டார்.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, பிரதேச மக்கள் பிரதிநிதிகள், அனுராதபுர மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய, பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan