பிரதமருக்கு எதிரான அவதூறு பரப்புரையை ஏற்க முடியாது! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம்
கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் தற்போது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக் கொள்ளவே முடியாத அவதூறு பிரசாரங்களை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.
தீர்க்கமான கொள்கை முரண்கள்
அந்த பதிவில் மேலும், பிரதமர் என்கின்ற ரீதியிலும் அவரது கட்சியின் ஒரு முக்கியஸ்தர் என்ற வகையிலும் கல்வி அமைச்சர் என்கின்ற ரீதியிலும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் எமது அமைப்புக்கும் எனக்கும் மிக முக்கியமான தீர்க்கமான கொள்கை முரண்கள் இருக்கின்றன.

இருந்த போதிலும் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத அவதூறு பிரசாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.