கிணற்றிலிருந்து வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு பிரதேசத்தில் வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து வயோதிப பெண் ஒருவர் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு வெளிச்ச வீட்டு வீதி பாலமீன்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 79 வயதுடைய வள்ளித்தங்கம் கந்தசாமி என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை
குறித்த வயோதிப பெண் தனிமையில் வசித்து வந்த நிலையில் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு - முன்னரே எச்சரித்த குடும்ப உறுப்பினர் News Lankasri
ஹமாஸ் பாணியில் ட்ரோன் தாக்குதல்... டெல்லி குண்டுவெடிப்பில் பயங்கரவாதிகளின் திட்டம் அம்பலம் News Lankasri