மாணிக்க கங்கையில் நீராட சென்ற வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த கதி!
கதிர்காமம் - தம்பே வீதியில் மாணிக்க கங்கை அருகே நீராடச் சென்ற பெண் ஒருவரை நேற்று (19.10.2022) முதலை இழுத்துச் சென்றுள்ளது.
பொலிஸ் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டு உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மாணிக்க கங்கையில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீண்ட தேடுதலின் பின்னர் குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வயோதிப பெண் சடலமாக மீட்பு
சடலமாக மீட்கப்பட்ட பெண் 75 வயதுடைய செல்ல கதிர்காமம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனை
கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலமானது பிரேத பரிசோதனைக்காக தெபரவெவ வைத்தியாசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கதிர்காம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
