காணியில் 63 வயது பெண்ணின் சடலம் மீட்பு - பொலிஸார் தீவிர விசாரணை
அம்பாந்தோட்டை - வீரகெட்டிய, புஹுல்ஹேன பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வீரகெட்டியவின் புஹுல்ஹேன பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த நிலையில் கிடப்பதாக வீரகெட்டிய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
63 வயது பெண்ணின் சடலம் மீட்பு
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண், விதரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என கண்டறியப்பட்டுள்ளார்.
மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.
மேலும், அவரது உடல் தங்கல்லே மருத்துவமனை பிரேச அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri