20 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கைக்கு தங்க பதக்கம்.. ருமேஷ் தரங்கவின் வரலாற்றுச் சாதனை
கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கை வீரரான ருமேஷ் தரங்க (Rumesh Tharanga) தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் கொமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வெல்வதற்காக இலங்கை காத்திருந்த 20 ஆண்டுகால நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.
வரலாற்றுச் சாதனை
இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா (Neeraj Chopra) உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், ருமேஷ் தரங்க 89.75 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் ஆனார்.

கடந்த 2006ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற கொமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் வீரர் சிந்தன விதானகே (Chinthana Vidanage) தங்கம் வென்றதற்குப் பிறகு, கொமன்வெல்த் போட்டிகளில் இலங்கை பெறும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
மேலும், கொமன்வெல்த் விளையாட்டு வரலாற்றுப் பக்கங்களில் இலங்கை பெறும் 5ஆவது தங்கப் பதக்கமும் இது என்பதுடன், சர்வதேச தடகளப் போட்டிகளில் இலங்கை பெற்ற மிகச் சிறந்த சாதனைகளில் ஒன்றாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வரலாற்றை புரட்டிப் போட்ட நீதிமன்ற தீர்ப்பு..! ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் நடந்த அதிரடி திருப்பம்
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam