யாழில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பெண்! தடயவியல் பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணத்தில் இளம் பெண்ணொருவரை கத்தியால் குத்திகொலை செய்த பின்னர் இளைஞரொருவர் தொடருந்து முன்பாக பாய்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கோவில் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (5) இரவு அத்துமீறி நுழைத்த இளைஞன் வீட்டில் இருந்த ஒரு பிள்ளையின் தாயான பெண் மீது சரமாரியாக கத்திகுத்து தாக்குதலை மேற்கொண்டு, பெண்ணின் தலைமுடிகளையும் கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார்.
இந்த தாக்குதலில் குறித்த பெண் சம்பவ இடத்தியேயே உயிரிழந்துள்ளார்.
பெண்ணின் தாயார் மீதும் கத்திக்குத்து
இதனைத்தொடர்ந்து குறித்த பெண்ணின் தாயார் மீதும் இளைஞன் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதில் , தாயார் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் அங்கிருந்து தப்பிச்சென்று அரியாலை பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் தொடருந்தின் முன் பாய்ந்து உயிரைமாய்த்துள்ளார்.
குறித்த சம்பவத்தில், சமையல் கலைஞரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆன் லக்ஷா இக்னேஷியஸ் (வயது 32) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணை படுகொலை செய்த பின்னர் தொடருந்து முன்பாக பாய்ந்து உயிரைமாய்த்த இளைஞர் கிளிநொச்சி, பரந்தன் சிவபுரம் பகுதியை சேர்ந்த தேவதாஸ் புகழரசன் (வயது 23) என தெரியவந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனை
யாழில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் சம்பவத்தில் உயிரிழந்த பெண் சமையல் கலைஞராகவும், சமையல் கலைஞர் படிப்பினை நிறைவு செய்து பயிற்சி சமையல் கலைஞராகவும் குறித்த இளைஞரும் வேலை செய்து வந்துள்ளனர்.

இருவருக்கும் இடையில் காதல் உறவு இருந்திருக்கலாம் என்றும், அதன் காரணமாக கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் கொலை இடம்பெற்ற வீட்டில் தடயவியல் பொலிஸார் சோதனைகளை முன்னெடுத்துள்ளதுடன் , சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை உயிரிழந்த பெண்ணின் கணவன் கடந்த 2021ஆம் ஆண்டு தனது உயிரைமாய்த்துள்ள நிலையில் பெண் மறுமணம் செய்யாது தனது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவில் இரகசியமாக நாடு திரும்பிய ஷிரந்தி..! மீண்டும் FCID அழைப்பு - அடுத்தடுத்து சந்திக்கவுள்ள சிக்கல்