காவி உடை அகற்றப்பட்டதால் கடும் மன உளைச்சலில் ஞானசாரர்! புலம்பியபடி சிறைக்குச் சென்றார்..
எந்தவொரு அரசாங்கமும் எனது காவியுடையை அகற்றியதில்லை. ஆனால், இந்த அரசாங்கம் எனது காவியுடையை அகற்றியுள்ளது என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற வழக்கு விசாரணை ஒன்றிற்காக, சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்டு, பின்னர் மீண்டும் அழைத்துச் செல்லப்படும் போதே ஞானசார தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பு செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான வழக்கு விசாரணைகளின் அடிப்படையில், பொதுமன்னிப்புக்கு முன்னர் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத் தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நேற்றிலிருந்து நடைமுறைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்திருந்தது.
கடும் மன விரக்தி
இந்தநிலையில், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த ஞானசார தேரர், இன்று மற்றுமொரு வழக்கு விசாரணைக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இதன்போது, அவர் பிக்குகளுக்கான காவி உடையை தவிர்த்து, வெள்ளை நிற உடையில் அழைத்து வரப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, இன்றைய வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஞானசாரர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படும் போது நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த ஊடகங்களிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திச் சென்றுள்ளார்.
இதன்போது, “தான் ஐந்து தடவைககும் மேல் சிறைத் தண்டனைப் பெற்றதாகவும், எனினும் எந்தவொரு அரசாங்கமும் தனது தண்டனைக் காலத்தின் போது காவியுடையை களையச் சொன்னதில்லை எனவும், தற்போதைய அரசாங்கம் இவ்வாறு தனது காவியுடையை அகற்றி வெள்ளை நிற அங்கிக்கு மாற்றியுள்ளதாகவும்” குற்றம் சுமத்தினார்.
மேலும், சிறையில் இருக்கும்போது காவியுடையை அணிவதற்கு வாய்ப்புக்கள் உள்ளனவா என்பதை மகா சங்கத்தினர்தான் அறிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், காவியுடை அணிந்திருந்தாலும், வெள்ளை சிறை அங்கி அணிந்திருந்தாலும், ஞானசாரர் எப்போதும் ஞானசாரர்தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்துத் தான் தாங்கள் வேலை செய்துள்ளதாகவும், இதனையும் எதிர்கொள்வோம் என்றும், பொறுத்திருந்து பார்க்கலாம் என்றும் இதன்போது ஞானசாரர் கடும் விரக்தியுடன் தெரிவித்துச் சென்றுள்ளார்.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan