கொழும்பின் புறநகர் பகுதியில் கணவன் வெளிநாடு சென்ற நிலையில் மர்மமாக உயிரிழந்த மனைவி
கொழும்பின் புறநகர் பகுதியில் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்தை தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
66 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண்ணுடன் தகாத உறவினை பேணிய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் கணவன்
உயிரிழந்த பெண்ணின் கணவன் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில், அண்மையில் விடுமுறைக்காக நாடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில் நேற்றையதினம் அவர் மீண்டும் வெளிநாடு சென்ற நிலையில், அன்றையதினமே மனைவி உயிரிழந்துள்ளார்.
கணவன் வெளிநாடு சென்றுதும் முறையற்ற கணவன் வீட்டுக்கு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிரேத பரிசோதனை
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலத்தின் பிரேதப் பரிசோதனை ஹோமாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 18 மணி நேரம் முன்

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam
