கிளிநொச்சியில் கின்னஸ் உலக சாதனை பதிவேட்டில் பதிவுசெய்த பெண்!
யாழ்ப்பாணத்தில் பிறந்து கனடா நாட்டில் வசித்துவரும் குமுதினி கோபாலகிஸ்ணன் கின்னஸ் (Guinness) உலகசாதனை பதிவேட்டில் தனது சாதனையினை பதிவு செய்துள்ளார்.
இந்த உலக சாதனை நிகழ்வு 01.04.2026 அன்று ஏ9 வீதி திருமுறிகண்டி பகுதியில் நடைபெற்றுள்ளது.
சேகரித்த மெழுகுவர்த்தி தாங்கிகளை வைத்து இந்த சாதனை பதிவினை மேற்கொண்டுள்ளார்.
உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை! இலங்கையின் பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்புகளில் சிக்கல்
777 மெழுகுவர்த்தி தாங்கிகளை சேகரித்து
இந்த சாதனைக்காக அவர் 30 ஆண்டுகளாக மெழுகுவர்த்தி தாங்கிகளை பல்வேறு நாடுகளில் சேகரித்து வந்துள்ளார்.
இதற்கு முன்னர் 527 மெழுகுவர்த்தி தாங்கிகளை வைத்து அமெரிக்காவினை சேர்ந்த பெண் ஒருவர் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இந்த சாதனையினை முறியடிக்க குமுதினி கோபாலகிஸ்ணன் 777 மெழுகுவர்த்தி தாங்கிகளை சேகரித்து சாதனை நிகழ்த்தும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இவரின் இந்த சாதனையினை புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் கமலநாதன் மயூரன், சுபீந்திரன் நதிறுசன் மாங்குளம் பொது சுகாதார பரிசோதகர் ,வழக்கறிஞர் துளசி சஞ்யீவ ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள்.
இவ்வாறு பல்வேறு வகையான 777 மெழுகுவர்த்தி தாங்கிகளை சேகரித்து அதனை பார்வைக்கு வைத்து நடுவர்களின் கண்காணிப்பின் கீழ் கின்னஸ் உல கசாதனை பதிவேட்டில் பதிவுசெய்துள்ளார்.
இதேவேளை இந்த 777 மெழுகுவர்த்தி தாங்கிகள் அனைத்தும் மக்கள் பாவனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த நிகழ்வில் பொதுமக்கள், ஊடகர்கள் என பலர் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.



கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri