சீரற்ற காலநிலையால் நேர்ந்த விபரீதம் - பெண்ணொருவர் உறக்கத்தில் மரணம்
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பண்டாரவளையில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 61 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண் மரணம்
மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலை உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் சுவர் மீது இடிந்து வீழ்ந்ததாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பண்டாரவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மோசமான காலநிலை
இதேவேளை, மோசமான காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் பல வீதிகள் தடைப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

மண்சரிவு, மரங்கள் மற்றும் பாறைகள் விழுவதால் இந்த வீதிகள் தடைப்பட்டுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam