பட்டப்பகலில் பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு! தீவிர விசாரணையில் பொலிஸார்
வீதியில் வைத்து குடும்ப சுகாதார சேவையின் பெண் உத்தியோகத்தரின் தங்க சங்கிலியை கொள்ளையிட்டுச் சென்ற இரண்டு சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் அனுராதபுரம் தலைமையக பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
“சம்பவத்தன்று, குடும்ப சுகாதார சேவையின் பெண் உத்தியோகத்தர் தனது கடமைகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த அடையாளம் ந்தெரியாத பெண் உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளை மோதியுள்ளனர்.
சந்தேக நபர்கள்
இதன்போது குடும்ப சுகாதார சேவையின் பெண் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்துள்ளது.

பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் குடும்ப சுகாதார சேவையின் பெண் உத்தியோகத்தரின் கழுத்தில் இருந்த 3 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க மாலையை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து குடும்ப சுகாதார சேவையின் பெண் உத்தியோகத்தர் இது தொடர்பில் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் அநுராதபுரம் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025