வெளிநாடொன்றில் திடீரென பாதையில் ஏற்பட்ட பிளவில் சிக்கிய இந்திய பெண் : தொடரும் மீட்பு பணி
மலேசியா (Malaysia) - கோலாலம்பூரில் வீதியில் ஏற்பட்ட பிளவில் பெண்ணொருவர் விழுந்துள்ள நிலையில் அவரை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த விபத்து சம்பவத்தின் போது குறித்த பெண் சுமார் 8 மீற்றர் ஆழ குழியில் விழுந்துள்ளார்.
சம்பவத்தில் 48 வயதான இந்திய பெண் ஒருவரே இவ்வாறு வீதியோர நடைபாதையில் சென்று கொண்டு இருந்த போது திடீரென உள்வாங்கிய தரைப்பகுதியில் சிக்கியுள்ளார்.
மீட்பு நடவடிக்கைகள்
இதன்போது, அவசர பொலிஸ் பிரிவிற்கு அறியப்படுத்தியதை அடுத்து மீட்பு பணியினர் வரவழைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Rakaman CCTV detik cemas kejadian tanah mendap di Masjid India, Kuala Lumpur yang berlaku sekitar jam 8 pagi Jumaat.#MediaSelangor #masjidindia #CCTV pic.twitter.com/NdeCVlLPor
— Media Selangor (@Media_Selangor) August 23, 2024
நிலத்தடி நீர் மேற்பரப்பில் உள்ள பாறைபோது பொதுவாக குறித்த மூழ்கும் துளைகள் உருவாகின்றமையால் அவ்விடத்தில் ஒரு துளையான அமைப்பு ஏற்படுகின்றது.
Satu kejadian tanah jerlus berlaku di hadapan Masjid India, Kuala Lumpur, pagi ini. pic.twitter.com/Dy5liLlm3u
— Utusan TV (@UtusanTV) August 23, 2024
இவற்றின் அவசியம் குறித்து உலகலாவிய ரீதியில் பெரிதும் துல்லியமான தரவு இல்லாத போதும் அவை அமைக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை, இவற்றினால் ஏற்படும் ஆபத்துக்களும் விபத்துக்களும் பெரியளவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.