விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு
கிண்ணியா - மட்டக்களப்பு பிரதான வீதி உப்பாறு பாலத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மற்றும் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாகக் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் கிண்ணியா தள வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றி வரும் மூதூர் - இறால்குழி பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான ஜோதிமணி (42வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
சம்பூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்குச் சென்று மீண்டும் திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது உப்பாறு பாலத்துக்கு அருகில் பின்புறமாக வந்த பேருந்து முந்திச்செல்ல முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் மோதியதாகவும் இதனையடுத்து சம்பவ இடத்தில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய சாரதியைக் கைது செய்துள்ளதாகவும் உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளைக் கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
