வவுனியா - புதூர் பகுதியில் தொடருந்தில் மோதி ஒருவர் பலி
வவுனியா - புளியங்குளம், புதூர் பகுதியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட பெண் மீது தொடருந்து மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவமானது நேற்று (29.02.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது உயிரிழந்த த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற தொடருந்தானது புதூர் பகுதியில் உள்ள தொடருந்து கடவையைக் கடக்க முற்பட்ட பெண் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து, மரணமடைந்த பெண்ணின் சடலம் மாங்குளம் தொடருந்து நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஒப்படைக்கப்பட்டதுடன், அங்கிருந்து மாங்குளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
[
]
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam