மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி
காலியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து, காலி, கொஸ்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனபல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளுடன் முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
விபத்தின் போது, மோட்டார் சைக்கிளின் செலுத்துநரும் பின்புறத்தில் பயணித்த பெண்ணும் படுகாயமடைந்த நிலையில், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கல்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய பெண் ஆவார். இதனையடுத்து முச்சக்கரவண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் கொஸ்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



